|
|
விதை நேர்த்தி :: விதை மேலாண்மை |
பருத்தி விதையில் அமில முறையில் பஞ்சு நீக்கம்
|
அமில பஞ்சு நீக்கம் என்பது விதை உறையின் மேல் எஞ்சியுள்ள பஞ்சை நீக்குவதாகும். இது பருத்திக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும்.
செய்முறை
ஒரு உலர்ந்த பிளாஸ்டிக் வாளியில் ஒரு கிலோ பஞ்சு விதையை எடுத்து அதில் 100 மி.லி. வணிக தர கந்தக அமிலத்தை ஊற்றும் போதே விதைகளை ஒரு குச்சி கொண்டு 2 அல்லது 3 நிமிடங்களுக்கு விடாமல் ஒரே சீராக கலக்க வேண்டும். இவ்வாறு கலக்கும் போது விதைகளின் மேலுள்ள பஞ்சு நீக்கி விதைகள் காப்பிக்கொட்டை நிறத்திற்கு வரும். பின்னர் விதைகளை தண்ணீர் விட்டு 5 அல்லது 6 முறை அமிலம் நீக்கும்படி நன்கு கழுவ வேண்டும். கடைசி முறை கழுவும போது நீரை நன்கு கலக்கி சிறிது நேரம் அப்படியே விட்டுவிட வேண்டும். பின்பு, நீரின் மேலாக மிதக்கும் பொக்கு விதைகள் மிகச்சிறிய மற்றும் சரியாக முற்றாத விதைகள், உடைந்த விதைகள், பூச்சி மற்றும் பூஞ்சாணத் தாக்குதலுக்குள்ளான விதைகள் முதலானவற்றை அரித்து எடுத்து விடவும். பின்பு அடியில் தங்கியுள்ள தரமான, நன்கு முற்றிய விதைகளை மட்டும் பிரித்தெடுத்து நிழலில் உலர்த்தி பின்பு வெய்யிலில் பழைய ஈரப்பதத்திற்கு வரும் வரை உலர்த்த வேண்டும்.
|
|
|
|
பஞ்சு நீக்காத விதைகள் |
அமில முறையில் பஞ்சு நீக்கிய விதைகள் |
விதை நேர்த்தி செய்யும்போது கவனிக்க வேண்டியைவை |
- விதைகளை அமிலம் கொண்டு விதை நேர்த்தி செய்யும் போது மிக கவனமாக செய்ய வேண்டும்.
- முக்கியமாக அமிலத்தை கையைக் கொண்டு கலக்கக்கூடாது. கலக்குவதற்கு குச்சியை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
- இதற்கு பிளாஸ்டிக் வாளியை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் அல்லாத மற்ற பாத்திரங்களை பயன்படுத்தக் கூடாது.
- 2அல்லது மூன்று நிமிடங்களுக்கு மேல் அமில நேர்த்தி செய்யக் கூடாது. அப்படி அதிக நேரம் செய்வதால் விதைகளின் முளைப்புத்திறன் பாதிக்கப்படும்.
|
நன்மைகள் |
- விதைமூலம் பரவக்கூடிய நோய்க்கிருமிகள் அகற்றப்படுகின்றன.
- விதை உறையின் மேல் உள்ள காய்ப்புழுக்களின் முட்டைகள், புழு மற்றும் கூட்டுப்புழுக்கள் அழிக்கப்படுகின்றன.
- உடைந்த, முதிராத மற்றும் வற்றி வதங்கிய விதைகள் பிரித்தெடுக்கப்படுகின்றன. முளைப்புத்திறன் அதிகரித்து காணப்படும்.
- கையாளுதல் மற்றும் விதைப்பது எளிது. பயிர் எண்ணிக்கையை பராமரிக்க உதவுகின்றது.
|
Updated On: Jan, 2016 |
|
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.
|
|